நெல்லையில் டாடா சூரிய மின் உற்பத்தி நிலையத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

February 6, 2025

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் தொழில் பூங்காவில் ரூ.4,400 கோடி மதிப்பில் உருவான டாடா நிறுவனத்தின் சூரிய மின் உற்பத்தி ஆலையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (பிப்.6) தொடங்கி வைத்தார். இதனால் நெல்லை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 2,800 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்று நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, விக்ரம் சோலார் நிறுவனத்தின் கட்டுமான பணிகளுக்கான அடிக்கல்லை முதல்வர் நாட்டினார். முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்று நெல்லை வந்துள்ளார். திமுகவினர் மற்றும் […]

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் தொழில் பூங்காவில் ரூ.4,400 கோடி மதிப்பில் உருவான டாடா நிறுவனத்தின் சூரிய மின் உற்பத்தி ஆலையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (பிப்.6) தொடங்கி வைத்தார். இதனால் நெல்லை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 2,800 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்று நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, விக்ரம் சோலார் நிறுவனத்தின் கட்டுமான பணிகளுக்கான அடிக்கல்லை முதல்வர் நாட்டினார்.

முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்று நெல்லை வந்துள்ளார். திமுகவினர் மற்றும் பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். நிகழ்வில் பேரவைத் தலைவர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, டி.ஆர்.பி. ராஜா, தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu