மஹாராஷ்டிராவில் சிறார்கள் மொபைல் போன் பயன்படுத்த தடை

November 18, 2022

மஹாராஷ்டிராவில் ஒரு கிராமத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மஹராஷ்டிராவின் யவத்மால் மாவட்டத்தில் உள்ள பன்சி கிராமத்தில், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பன்சி கிராம பஞ்சாயத்து தலைவர் கஜனன் தலே கூறுகையில், கொரோனா பரவல் காலத்தில் 'ஆன்லைன்' வகுப்புகளுக்காக பள்ளி மாணவ - மாணவியர் மொபைல் போன் பயன்படுத்த துவங்கினர். ஆனால், தற்போது சிறுவர்கள் ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கியுள்ளனர். இதனால் […]

மஹாராஷ்டிராவில் ஒரு கிராமத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

மஹராஷ்டிராவின் யவத்மால் மாவட்டத்தில் உள்ள பன்சி கிராமத்தில், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பன்சி கிராம பஞ்சாயத்து தலைவர் கஜனன் தலே கூறுகையில், கொரோனா பரவல் காலத்தில் 'ஆன்லைன்' வகுப்புகளுக்காக பள்ளி மாணவ - மாணவியர் மொபைல் போன் பயன்படுத்த துவங்கினர். ஆனால், தற்போது சிறுவர்கள் ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கியுள்ளனர்.

இதனால் கிராம பஞ்சாயத்து கூட்டத்தில், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu