நாடு முழுவதும் சுமார் 71,000 பேருக்கு பணி நியமன கடிதங்களை பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்.
அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்குமாறு அனைத்து ஒன்றிய அரசு துறைகளையும் பிரதமர் மோடி கடந்த ஜூன் மாதம் கேட்டுக்கொண்டார். இதையடுத்து கடந்த அக்டோபர் மாதம், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 75 ஆயிரம் பேருக்கு பிரதமர் மோடி பணி நியமன கடிதங்களை வழங்கினார்.
இந்நிலையில், ஒன்றிய அரசின் ரோஜ்கார் மேளா வேலைவாய்ப்பு கண்காட்சி இன்று நடக்கிறது. அதில், சுமார் 71 ஆயிரம் பேருக்கு காணொலி காட்சி மூலமாக பிரதமர் மோடி பணி நியமன கடிதங்களை வழங்குகிறார்.