மத்தியபிரதேசத்தில் 50,700 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நல திட்டங்களுக்கு பிரதம மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
இன்று மத்திய பிரதேசம் செல்லும் பிரதமர் மோடி அங்கு மாநிலம் முழுவதும் புதிய தொழிற்சாலைகள் திட்டங்கள், பினா சுத்திகரிப்பு நிலையத்தில் பெட்ரோ கெமிக்கல் காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட பத்து திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.இதில் பாரத் பெட்ரோலியம் லிமிடெட் நிறுவனத்தின் பினா சுத்திகரிப்பு நிலையம் 49 கோடி ரூபாயில் உருவாக்கப்பட உள்ளது. இதில் சுமார் 1200 KTPA பார்மா போன்றவற்றை உற்பத்தி செய்ய உள்ளது. இதனால் இந்தியாவின் இறக்குமதியை குறைக்க பயனுள்ளதாக இருக்கும்.
இந்த ஆண்டு இறுதியில் மத்திய பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறார் . பின்னர் சத்தீஸ்கர் மாநில பொதுக்கூட்ட பேரணியில் கலந்து கொண்டு பேச இருக்கிறார். அங்கு 6350 கோடி ரூபாய் மதிப்பிலான ரயில் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.