அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு

தேர்தல் பிரச்சாரங்களின் போது மோடியின் பெயரை குறிப்பிட்டு, அவதூறாக பேசியதாக, ராகுல் காந்தி மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இது தொடர்பாக நடைபெற்ற வழக்கு விசாரணையில், அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன், அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டது. இதற்கான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த குஜராத் உயர்நீதிமன்றம், ராகுல் காந்தியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், அவருக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கப்படாது என கூறியுள்ளது. மேலும், இந்த […]

தேர்தல் பிரச்சாரங்களின் போது மோடியின் பெயரை குறிப்பிட்டு, அவதூறாக பேசியதாக, ராகுல் காந்தி மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இது தொடர்பாக நடைபெற்ற வழக்கு விசாரணையில், அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன், அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டது. இதற்கான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த குஜராத் உயர்நீதிமன்றம், ராகுல் காந்தியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், அவருக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கப்படாது என கூறியுள்ளது. மேலும், இந்த வழக்கிற்கான இறுதி தீர்ப்பு நீதிமன்ற கோடைகால விடுமுறைக்கு பிறகு அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது. எனவே, ராகுல் காந்தி, இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தை நாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில், அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தீர்ப்பு காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மேலும், குஜராத் நீதிமன்றம் வெளியிட்டுள்ள இந்த தீர்ப்பை குறிப்பிட்டு, பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, இது ‘ஜனநாயக படுகொலை’ என கூறி வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu