இந்தியாவுடனான உறவை வலுப்படுத்தும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 15 முதல் 19 வரை சைப்பிரஸ், கனடா மற்றும் குரோஷியா நாடுகளுக்கு ஐந்து நாள் அரசுமுறைப் பயணமாகச் செல்கிறார்.
சைப்பிரஸில் (ஜூன் 15–16) அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடோலிடஸின் அழைப்பில், இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன. கனடாவில் (ஜூன் 16–17) பிரதமர் மார்க் கார்னியின் அழைப்பில் நடைபெறும் G7 மாநாட்டில் மோடி ஆறாவது முறையாக பங்கேற்கிறார். குரோஷியாவில் (ஜூன் 18–19), இந்திய பிரதமராக பயணம் மேற்கொள்கிற முதல் தலைவர் என்ற பெருமையை பெறுகிறார்.
இந்தப் பயணம், மத்திய தரைக்கடல் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் உள்ள இந்தியாவின் உறவுகளை வலுப்படுத்தும் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.