பிரதமர் மோடி இன்று ரஷிய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை

July 9, 2024

ரஷ்யாவில் அதிபர் புதினை பிரதமர் மோடி சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்திய ரஷ்யா இடையேயான வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று ரஷ்யா சென்றார். அவர் அங்கு அதிபர் புதினை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். மாஸ்கோவில் 22 வது வருடாந்திர உச்சி மாநாடு இன்று நடைபெறும். அதில் கலந்துகொண்டு அவர் அதிபர் புதினுடன் பேச்சு வார்த்தை நடத்துவார். மேலும் இருநாட்டுப் பிரதிநிதிகள் […]

ரஷ்யாவில் அதிபர் புதினை பிரதமர் மோடி சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இந்திய ரஷ்யா இடையேயான வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று ரஷ்யா சென்றார். அவர் அங்கு அதிபர் புதினை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். மாஸ்கோவில் 22 வது வருடாந்திர உச்சி மாநாடு இன்று நடைபெறும். அதில் கலந்துகொண்டு அவர் அதிபர் புதினுடன் பேச்சு வார்த்தை நடத்துவார். மேலும் இருநாட்டுப் பிரதிநிதிகள் குழுவுடன் இணைந்து பேசுவார்கள். அப்பொழுது இருதரப்பு உறவுகள், பொருளாதார, சர்வதேச பிரச்சனைகள், வர்த்தகம், எரிசக்தி, கல்வி, தொழில்நுட்பம், ராணுவம், கல்வி, கலாச்சாரம், என பல்வேறு துறைகள் குறித்து இருவரும் பேசுகிறார்கள். இந்த பேச்சுவார்த்தையின் போது ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் இந்திய வீரர்களை விடுவிக்குமாறு பிரதமர் மோடி புதினை கேட்டுக்கொள்வார். அதோடு ரஷ்யாவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியினரை சந்தித்து மோடி உரையாடுகிறார். ரஷ்ய பயணத்தை முடித்துக் கொண்டு இன்று ஆஸ்திரியாவுக்கு பிரதமர் மோடி செல்கிறார். அங்கு அந்நாட்டு அதிபரை சந்திக்க உள்ளார்.

0
0
பகிர:

தொடர்பான செய்திகள்

மேலும் படிக்க
Ks-7 இஸ்ரேல் இந்தியர்களுக்கு அவசர உதவி எண் அறிவிப்பு இஸ்ரேலில் கடந்த சனிக்கிழமையில் இருந்து ஹமாஸ் அமைப்பு தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது பயங்கர தாக்குதல் நடத்தி வருவதில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியாகி உள்ளனர். மேலும் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்க போவதாக கூறி போர்க்களத்தில் இருக்கிறது. இதனால் காசா முழுவதும் உணவு, குடிநீர், மின்சாரம் உட்பட அனைத்து செய்திகளையும் துண்டித்துள்ளது. தற்போது ஐந்தாவது நாளாக போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களுக்கு உதவுவதற்காக இந்தியா 24 மணி நேர அவசர சேவையை அறிவித்திருக்கிறது. இதில் பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களில் அவசர உதவி தேவைப்படுபவர்கள் 24 மணி நேரமும் செயல்படும் இந்தியர்களுக்கான அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. மேலும் அங்குள்ள இந்தியர்களின் நிலையை தெரிந்து கொள்ளவும் அவர்களின் உறவினர்களுக்கு இங்கு வெளியுறவுத் துறையில் ஒரு தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அவசர தொலைபேசி எண்கள் மற்றும் வாட்ஸாப் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. 180011778797 இலவச எண் +91-11-23012113 +91-11-23014104 +91-11-23017905 +919968291988 Emergency-Helpline-Notification-for- Indians-in-Israel இந்திய அவசர உதவி எண், இஸ்ரேல் போர், இஸ்ரேல் வாழ் இந்தியர்கள்,Emergency Helpline Notification for Indians in Israel இந்தியா
1 2 3 806

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu