நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக 3வது முறையாக நேற்று பதவியேற்றுக் கொண்டார். அதன் பிறகு முதல் முறையாக ஜி 7 மாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலிக்கு பயணிக்கிறார்.
வரும் 13ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, இத்தாலி நாட்டில் ஜி 7 நாடுகள் பங்கேற்கும் மாநாடு நடைபெறுகிறது. இது 50 வது ஜி 7 உச்சி மாநாடு என்பது குறிப்பிடத்தக்கது. ஜி 7 என்பது, பிரிட்டன், அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், கனடா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பாகும். இந்த முறை, இத்தாலியில் மாநாடு நடைபெறுவதால், இந்தியா, பிரேசில், சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதனை ஏற்று, ஒரு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 14ஆம் தேதி இத்தாலி பயணிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் ஜி 7 கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் அனைவரும் பங்கேற்க உள்ளனர்.