காசியில் நடைபெற்ற தமிழ் சங்கம விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பாஷினி என்ற செயற்கை நுண்ணறிவு கருவியை பயன்படுத்தினார். இது மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது.
காசி தமிழ் சங்கமத்தில் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, நிகழ் நேரத்தில் மொழிபெயர்ப்பு மேற்கொள்ளும் செயற்கை நுண்ணறிவு கருவியை பயன்படுத்தினார். இந்த கருவி, கடந்த ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற டிஜிட்டல் இந்தியா நிகழ்வின்போது அறிமுகம் செய்யப்பட்டது. இது, இந்திய மொழிகளில் உரையாடுவதற்கு மிகவும் துணை புரிவதாக இருக்கும் என சொல்லப்பட்டது. அதன்படி, இந்த கருவியை பிரதமர் பயன்படுத்தியுள்ளது அதிக கவனம் பெற்றுள்ளது. இந்த கருவி மூலம், சொந்த மொழியில் ஒருவர் உரையாடுவது மற்றொரு மொழியில் எளிமையாக மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படும். இதனை பயன்படுத்தி உரையாடிய பிரதமர் மோடி, ‘இந்த கருவி ஒரு புதிய ஆரம்ப புள்ளியாக உள்ளது’ என கூறினார்.