ஹமாஸ் ராணுவ தளபதி முகமது தைப் கொலை செய்யப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் ராணுவ தளபதி முகமது தைப் கொலை செய்யப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. இவர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் என்று இஸ்ரேல் தரப்பில் கூறப்படுகிறது. இவர் தெற்கு காசாவில் உள்ள கான்யூனிஸ் பகுதியில் வசித்து வந்தார். கடந்த ஜூலை 13ஆம் தேதி இங்கு இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலில் முகமது தைப் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் உயிரிழந்த செய்தியை இஸ்ரேல் பாதுகாப்பு படை தற்போது உறுதி செய்துள்ளது.














