இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 200 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இந்திய வீரராக புதிய சாதனை படைத்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபியில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில், ஜேக்கர் அலியின் விக்கெட்டை வீழ்த்தியபோது இந்த மைல்கல்லை எட்டினார். 104 போட்டிகளில் இந்த சாதனை அடைந்ததால், உலக அளவில் இரண்டாவது வேகமான வீரராகவும் அமைந்தார்.
மிட்செல் ஸ்டார்க் (102) முதலிடத்தில் உள்ள நிலையில், ஷமி (104), டிரண்ட் போல்ட் (107), பிரெட் லீ (112), ஆலன் டொனால்டு (117) ஆகியோரை முந்தினார். மேலும், 5,126 பந்துகளில் 200 விக்கெட்டுகள் வீழ்த்திய அதிவேக வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார்.














