71வது தேசிய திரைப்பட விருதுகளில் மோகன் லாலுக்கு உயரிய அங்கீகாரம்; பிரதமர் மோடி மலையாளத்தில் வாழ்த்து தெரிவித்தார்.
மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன் லால், இந்திய திரைப்படத்துறையின் உயரிய அங்கீகாரமான தாதாசாகேப் பால்கே விருது பெறுகிறார். வரும் 23ம் தேதி, 71வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் இந்த விருது வழங்கப்பட உள்ளது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் மலையாளத்தில் வாழ்த்து பதிவு செய்தார். அதில், “திறமை மற்றும் பன்முகத்தன்மையின் சின்னம் மோகன் லால். பல தசாப்தங்களாக நீடித்த தனித்துவமான கலை வாழ்க்கையைக் கொண்ட அவர், மலையாள சினிமா மற்றும் நாடக உலகின் முக்கிய நபராக உள்ளார். கேரள கலாச்சாரத்தின் மீது ஆழ்ந்த பற்றும், தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி போன்ற மொழிப் படங்களிலும் சிறப்பாக நடித்தும் தன்னை நிலைநிறுத்தியுள்ளார். திரைப்படம் மற்றும் நாடகத்துறையில் அவரது சாதனைகள் வருங்கால தலைமுறையினருக்கு உத்வேகம் தருகின்றன” என்று தெரிவித்துள்ளார்.இதன் மூலம், மோகன் லால் இந்திய சினிமாவின் பொற்கால சாதனையாளர்களில் ஒருவராக திகழ்வதை பிரதமர் வலியுறுத்தினார்.