ஒடிசாவின் முதல் மந்திரியாக மோகன் மாஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலுடன் ஒடிசாவில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் கடந்த 24 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பிஜூ ஜனதா தளம் கட்சி தோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து அங்கு சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்றது. தற்போது பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு பதவி ஏற்றதன் அடிப்படையில் ஒடிசாவில் புதிய ஆட்சி அமைக்கும் பணிகளை பாஜக தொடங்கியுள்ளது. அதன் அடிப்படையில் ஒடிசா மாநிலத்தின் புதிய மந்திரியை தேர்வு செய்வதற்கான கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் சட்டசபை கட்சி தலைவரை பாஜக எம்எல்ஏக்கள் தேர்வு செய்தனர். அதன்படி ஒடிசாவின் புதிய முதல் மந்திரியாக மோகன் சரண் மாஜியை தேர்வு செய்துள்ளனர். கனக் வர்தான் சிங் தியோ மற்றும் பிரவதி பரிதா ஆகியோர் துணை முதல் மந்திரிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.














