கிழக்கு ஐரோப்பாவில் உள்ள மால்டோவா நாட்டின் இறுதிக்கட்ட அதிபர் தேர்தலில், மேற்கத்திய ஆதரவாளரான தற்போதைய அதிபர் மாயா சந்து வெற்றி பெற்றார்.
கடந்த மாதம் 21-ஆம் தேதி நடைபெற்ற பொதுவாக்கெடுப்பில், ஐரோப்பிய யூனியனுடன் மால்டோவாவை இணைக்க அரசியல் சாசன திருத்தம் மேற்கொள்வதைப் பலவாக்காளர்கள் ஆதரித்தனர். அதே நேரத்தில், அதிபர் தேர்தலும் நடைபெற்றது. இதில் யாரும் பெரும்பான்மை வாக்குகளை பெறவில்லை. எனவே இறுதிக்கட்ட தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வாக்குகள் எண்ணப்பட்டு, மாயா சந்துவுக்கு 54% வாக்குகள் கிடைத்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.