பிரதமரின் மகனின் வாழ்க்கை முறை மக்களிடையே கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
சமூக வலைதளங்களில் வைரலான புகைப்படங்கள் அரசியல் சுழற்சியை உருவாக்கின.
மங்கோலியாவில் லவ்சன்னம்ஸ்ரைன் தலைமையிலான மங்கோலிய மக்கள் கட்சி ஆட்சி செய்து வருகிறது. சமீபத்தில் அவரது மகன் ஆடம்பர வாழ்க்கை நடத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. காதலியுடன் சுற்றிய புகைப்படங்களில் விலை உயர்ந்த பொருட்கள் இடம்பெற்றிருந்ததால் மக்கள் ஆத்திரமடைந்து பிரதமரின் ராஜினாமாவை கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். லவ்சன்னம்ஸ்ரைன் குற்றச்சாட்டுகளை மறுத்தபோதும், நிலைமை மோசமாகி பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில் பெரும்பான்மை ஆதரவை பெறத் தவறியதால் அவர் பிரதமர் பதவியை விலகினார்.