80% இந்தியாவை ஆக்கிரமித்த பருவமழை - இந்திய வானிலை ஆய்வு மையம் ஆச்சரிய தகவல்

கடந்த 1961ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக, 80% இந்தியாவை தென்மேற்கு பருவமழை முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த ஆச்சரிய தகவலை பகிர்ந்துள்ளது. வானிலை மையத்தில் பணி செய்யும் மூத்த விஞ்ஞானி நரேஷ் குமார், "இந்த ஆண்டிற்கான பருவமழை அமைப்பு முற்றிலுமாக வித்தியாசப்பட்டுள்ளது. ஒரே நாளில் டெல்லி மற்றும் மும்பை நகரங்களில் பருவ மழை தொடங்கியுள்ளது. இது கடந்த ஜூன் 21, 1961 ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாகும். இது தவிர, […]

கடந்த 1961ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக, 80% இந்தியாவை தென்மேற்கு பருவமழை முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த ஆச்சரிய தகவலை பகிர்ந்துள்ளது. வானிலை மையத்தில் பணி செய்யும் மூத்த விஞ்ஞானி நரேஷ் குமார், "இந்த ஆண்டிற்கான பருவமழை அமைப்பு முற்றிலுமாக வித்தியாசப்பட்டுள்ளது. ஒரே நாளில் டெல்லி மற்றும் மும்பை நகரங்களில் பருவ மழை தொடங்கியுள்ளது. இது கடந்த ஜூன் 21, 1961 ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாகும். இது தவிர, 80% இந்தியாவை பருவமழை ஆக்கிரமித்துள்ளது" என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், "தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வித்தியாசமாக அமைந்ததற்கு காலநிலை மாற்றம் காரணமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது. இது நேரடியாக கால நிலை மாற்றத்துடன் தொடர்புடையது அல்ல. 30 முதல் 40 ஆண்டுகால தரவுகளை ஆய்வு செய்து, இது குறித்த முடிவை எட்ட முடியும்" என்று கூறியுள்ளார். அத்துடன், "அரபிக் கடலில் இருந்து தென்மேற்கு பருவக்காற்று மகாராஷ்டிரா மாநிலத்தில் நுழையும் போது, வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியது. இவை இரண்டும் ஒன்று சேர்ந்ததால் ஒரே நாளில் மும்பை மற்றும் தில்லி நகரங்களில் தென்மேற்கு பருவமழை பெய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu