மான்டி கார்லோ மாஸ்டர் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேறி உள்ளார்.
களிமண் தரைப்போட்டி என அழைக்கப்படும் மான்டி கார்லோ மாஸ்டர் சர்வதேச டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச், இத்தாலி வீரர் லாரன்ஸ் ஆகியோர் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் கால் இறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் மோதினர். இதில் ஜோகோவிச் 7-5,7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறி உள்ளார். நாளை நடைபெற உள்ள காலிறுதி சுற்றில் ஆஸ்திரேலியா வீரர் டி மினாருடுடன் ஜோகோவிச் மோத உள்ளார்.