இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.7% ஆக குறைகிறது - மூடிஸ் அறிக்கை

September 1, 2022

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம், 7.7 சதவீதமாக இருக்கும் என்று மூடிஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பிரபல மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறித்து கணக்கீட்டு அறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் சார்பில், கடந்த மார்ச் மாதத்தில் 9.1% என்று கணக்கிடப்பட்ட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம், மே மாதத்தில் 8.8 சதவீதமாகக் குறைத்து அறிவிக்கப்பட்டது. தற்போது, அதனை 7.7 சதவீதமாக மேலும் குறைத்து, இந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதிகரிக்கும் வட்டி விகிதம், […]

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம், 7.7 சதவீதமாக இருக்கும் என்று மூடிஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

பிரபல மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறித்து கணக்கீட்டு அறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் சார்பில், கடந்த மார்ச் மாதத்தில் 9.1% என்று கணக்கிடப்பட்ட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம், மே மாதத்தில் 8.8 சதவீதமாகக் குறைத்து அறிவிக்கப்பட்டது. தற்போது, அதனை 7.7 சதவீதமாக மேலும் குறைத்து, இந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதிகரிக்கும் வட்டி விகிதம், பருவமழை பொய்த்தல் மற்றும் உலகளாவிய பொருளாதார மந்த நிலை போன்ற காரணங்கள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைவதற்கு காரணமாக அமையும் என்று தனது அறிக்கையில் நிறுவனம் கூறியுள்ளது. கடந்த 2021ல் 8.3 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி, 2022ல் 7.7 சதவீதமாகவும், 2023 ஆம் ஆண்டில், 5.2 சதவீதமாகவும் குறையும் என்று நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், “கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த பிறகு, பணவீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய ரிசர்வ் வங்கி போராடி வருகிறது. அத்துடன், இந்திய ரூபாயின் மதிப்பும் தொடர் சரிவைச் சந்தித்து வருகிறது. மேலும், பல மாதங்களாகவே, மத்திய ரிசர்வ் வங்கியின் ஆறு சதவீத விளிம்பைத் தாண்டியே பணவீக்க விகிதம் இருந்து வருகிறது. கூடுதலாக, ரெப்போ வட்டி விகிதமும் ஆகஸ்ட் மாதத்தில், 5.4 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இது போன்ற செயல்பாட்டால் பொருளாதார வளர்ச்சி குறைந்தே இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இருப்பினும் தனியார் துறையில் வளர்ச்சி இருக்கலாம் என்ற கருதப்படுகிறது” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu