எலான் மஸ்க், நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்தில் குடியேறுவது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். அவரது பதிவு சர்வதேச அளவில் பேசு பொருளாகி உள்ளது.
தனது எக்ஸ் பக்கத்தில், ரைட் சகோதரர்கள் செலுத்திய முதல் விமானத்தின் காணொளியை எலான் மஸ்க் பகிர்ந்து உள்ளார். அதை தொடர்ந்து, நிலவில் மனிதன் கால் வைத்து 50 ஆண்டுகள் கழிந்த பின்னும், அடுத்த கால் தடம் இன்னும் பதிக்கப்படவில்லை என்பது வருத்தமளிப்பதாகவும் ஏமாற்றம் அளிப்பதாகவும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், நிலவில் மனிதர்களுக்கான கட்டுமானங்களையும், செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வசிப்பதற்கான நகரங்களையும் உருவாக்க வேண்டும் என கூறியுள்ளார்.