இஸ்ரோவின் சந்திரயான்-3 திட்டம், நிலவு ஒரு காலத்தில் உருகிய நிலையில் இருந்தது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இது சந்திர மாக்மா பெருங்கடல் (LMO) என்ற கோட்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. பிரக்யான் ரோவர், நிலவின் மணற்பரப்பை ஆய்வு செய்ததன் மூலம் கிடைத்த தகவல்களை அடிப்படியாகக் கொண்டு இந்த முடிவு நேச்சர் என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
சுமார் 4.4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிலவு ஒரு உருகிய பந்தாக இருந்தது என்பதை இந்த ஆய்வு தெளிவாகக் காட்டுகிறது. மேலும், நிலவின் மண்ணின் கலவை பூமியின் மண்ணின் கலவைக்கு ஒத்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. நிலவு, காலப்போக்கில் குளிர்ந்ததால், இலகுவான பாறைகள் நிலவின் மேற்பரப்புக்கு மிதந்து வந்திருக்கலாம் என்ற கருத்தை இந்த தரவுகள் ஆதரிக்கின்றன. இந்த முக்கியமான கண்டுபிடிப்பு, எதிர்காலத்தில் நிலவில் மனிதர்கள் வாழ்வதற்கும், விவசாயம் செய்வதற்கும் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.