பீஜிங், ஏப்ரல் 29, 2022:
சைனீஸ் கம்யூனிஸ்ட் பார்ட்டியைச் சேர்ந்த ஜி ஜிங்பிங், 2012 ஆம் ஆண்டு முதல் கட்சியில் உயர் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், குவான்ஸ்கி பகுதியில் ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த கூட்டத்தில், 20 ஆவது தேசிய காங்கிரசின் பிரதிநிதியாக அவர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த உயர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் நபரே சீனாவின் அதிபர் பதவிக்குப் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கப்படுவார். இதன்மூலம், ஜி ஜிங்பிங் மூன்றாவது முறை சீன தேசத்தின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும் இது நூறு சதவிகிதம் உறுதியில்லை. ஏனெனில், 2012ஆம் ஆண்டு, ஹு ஜூனாட்டோ என்பவர் 18 ஆவது தேசிய காங்கிரசின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அவருக்குப் பதிலாக ஜி ஜிங்பிங் தான் அதிபரானார். அதற்குப் பின்னர் 19 ஆவது தேசிய காங்கிரஸ் பிரதிநிதியாக ஜீ ஜின்பிங் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதுவரை ஏழைப் பகுதியாக இருந்த குவான்ஸ்கி, அவரது ஆட்சியில் மிகுந்த வளர்ச்சி கண்டது. அத்துடன், ஜீ யின் நிர்வாகத் திறமை கட்சியின் பிம்பத்தையும் மாற்றி அமைப்பதாக இருந்தது. இதனால், அவருக்கு அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. எனவே, இந்த ஆண்டு, அவர் பிரதிநிதியாக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரே அதிபராக நீடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.