நினைத்ததை விட 100 மில்லியன் ஆண்டுகள் பழமையானது நிலவு - ஆய்வறிக்கை

December 27, 2024

நேச்சர் இதழில் வெளியான புதிய ஆய்வின்படி, சந்திரனின் வயது 4.51 பில்லியன் ஆண்டுகள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது பொதுவாக நம்பப்படும் 4.35 பில்லியன் ஆண்டுகளை விட 100 மில்லியன் ஆண்டுகள் அதிகம். சந்திரனின் பாறைகளில் காணப்படும் சிர்கான் கனிமங்களை ஆய்வு செய்ததன் மூலம் இந்த புதிய ஆய்வு இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த புதிய கண்டுபிடிப்பு சந்திரன் எப்படி உருவானது என்ற நம்முடைய முந்தைய புரிதலை மாற்றி அமைக்கிறது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, பூமியின் ஈர்ப்பு விசையின் காரணமாக […]

நேச்சர் இதழில் வெளியான புதிய ஆய்வின்படி, சந்திரனின் வயது 4.51 பில்லியன் ஆண்டுகள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது பொதுவாக நம்பப்படும் 4.35 பில்லியன் ஆண்டுகளை விட 100 மில்லியன் ஆண்டுகள் அதிகம். சந்திரனின் பாறைகளில் காணப்படும் சிர்கான் கனிமங்களை ஆய்வு செய்ததன் மூலம் இந்த புதிய ஆய்வு இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த புதிய கண்டுபிடிப்பு சந்திரன் எப்படி உருவானது என்ற நம்முடைய முந்தைய புரிதலை மாற்றி அமைக்கிறது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, பூமியின் ஈர்ப்பு விசையின் காரணமாக சந்திரனில் ஏற்பட்ட அலைகள் அதன் மேற்பரப்பில் உள்ள பாறைகளை மீண்டும் உருக்கியிருக்கலாம். இதனால், சந்திரனின் பாறைகளின் வயதை துல்லியமாக கணக்கிடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu