இந்தியாவில் அதிக முதலீடு: ஐரோப்பிய யூனியன் திட்டம்

October 10, 2022

இந்தியாவில் அதிக முதலீடு செய்ய ஐரோப்பிய யூனியன் திட்டமிட்டுள்ளது. நம் அண்டை நாடான சீனா, 'பெல்ட் அண்டு ரோடு' திட்டத்தின் வாயிலாக பல நாடுகளில் உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்து வருகிறது. உலக நாடுகளில் தன் வர்த்தகத்தை அதிகரிப்பதுடன் தன் ஆதிக்கத்தை வலுப்படுத்தும் வகையில் இந்த திட்டத்தை சீனா மேற்கொண்டு வருகிறது. இதற்கு போட்டியாக, 27 ஐரோப்பிய நாடுகள் அடங்கிய ஐரோப்பிய யூனியன் கடந்தாண்டு இறுதியில் புதிய திட்டத்தை அறிவித்தது. 'குளோபல் கேட்வே' என்ற இந்த திட்டத்தில் […]

இந்தியாவில் அதிக முதலீடு செய்ய ஐரோப்பிய யூனியன் திட்டமிட்டுள்ளது.

நம் அண்டை நாடான சீனா, 'பெல்ட் அண்டு ரோடு' திட்டத்தின் வாயிலாக பல நாடுகளில் உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்து வருகிறது. உலக நாடுகளில் தன் வர்த்தகத்தை அதிகரிப்பதுடன் தன் ஆதிக்கத்தை வலுப்படுத்தும் வகையில் இந்த திட்டத்தை சீனா மேற்கொண்டு வருகிறது.

இதற்கு போட்டியாக, 27 ஐரோப்பிய நாடுகள் அடங்கிய ஐரோப்பிய யூனியன் கடந்தாண்டு இறுதியில் புதிய திட்டத்தை அறிவித்தது. 'குளோபல் கேட்வே' என்ற இந்த திட்டத்தில் 24 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் பல நாடுகளுடனான வர்த்தகத்தை மேம்படுத்த அங்கு உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இது குறித்து இந்தியாவுக்கான பிரான்ஸ் துாதர் இமானுவேல் லீனாயின் கூறுகையில், இந்தியா, பிரான்ஸ் இடையேயான உறவு எப்போதும் சிறப்பாகவே உள்ளது.

மேலும் இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இந்தோ - பசிபிக் பிராந்தியம் தொடர்பாக இந்தியாவின் நிலையை ஆதரிக்கிறோம். இதை, ஏற்கனவே பலமுறை உறுதி செய்துள்ளோம். ஐரோப்பிய யூனியனின் குளோபல் கேட்கே திட்டத்தின் வாயிலாக, பல நாடுகளில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. குறிப்பாக இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அதிக திட்டங்கள் இருக்கும். இதில் மிகப் பெரியஅளவுக்கான முதலீடுகள் இந்தியாவில் செய்யப்படும் என்று அவர் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu