அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு காரணமாக 1000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணங்களில் பனிப்பொழிவு நிலவு வருகிறது. இதன் காரணமாக பாஸ்டன், நியூ போர்ட், நியூயார்க் போன்ற நகரங்களில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே கடும் பனிப்பொழிவு பெய்து வருகிறது. அதுவும் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவில் உள்ளது. இதன் காரணமாக வெப்பநிலை மைனஸ் 30 டிகிரி கடந்துள்ளது. இதனால் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 1000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேபோல் ரயில் மற்றும் சாலை போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் அதிகபட்சமாக மாசாசூட்சின் பாஸ்டன் நகரில் 20 சென்டிமீட்டர் அளவுக்கு பனிப்பொழிவு ஏற்பட்டது. பனிப்புயல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பென்சில்வெனிய மாகாணத்தில் மின்சார வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 2 லட்சம் வீடுகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது. இந்த பனிப்புயல் காரணமாக பல்வேறு இடங்களில் சாலை விபத்துகள் நடைபெறுகிறது. வரும் நாட்களில் பனிப்பொழிவு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.