முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் மற்றும் அவரது ஆட்சியில் பணியாற்றிய 200-க்கும் மேற்பட்ட குடியரசு கட்சியினர், அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் மற்றும் அவரது ஆட்சியில் பணியாற்றிய 200-க்கும் மேற்பட்ட குடியரசு கட்சியினர், கமலா ஹாரிசுக்கு ஆதரவு தெரிவித்த கடிதம் வெளியிட்டுள்ளனர். இந்த கடிதத்தில், டிரம்புக்கு ஆதரவு தெரிவிக்காமல், ஜனநாயக கட்சியின் துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, ஜார்ஜ் டபிள்யூ புஷ், செனட் உறுப்பினர் ஜான் மெக்கெயின் மற்றும் கவர்னர் மிட் ரோம்னி ஆகியோர் குடியரசு கட்சியினருக்கு எச்சரிக்கை விடுத்தனர், டிரம்பை மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுப்பது நாட்டிற்கு பேரிடையாக அமையும் என கூறினார்கள். தற்போது, 2020-ல் மேற்கொண்ட உத்திகளை மீண்டும் செயல்படுத்த முன்வருவதாகவும், முதன்முறையாக கமலா ஹாரிசுக்கு வாக்களிக்கத் தயாராக இருப்பதாகவும், கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.