ஈரானில் நடப்பாண்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு தூக்கு தண்டனை

December 6, 2022

இந்த ஆண்டு ஈரானில் இதுவரை குறைந்தது 504 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர் என்று நார்வேயை தளமாகக் கொண்ட ஈரான் மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது. அவர்களில் 4 பேருக்கு இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக ஈரான் அரசாங்கம் தூக்கு தண்டனை நிறைவேற்றியுள்ளது. இது கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச எண்ணிக்கை என்று சொல்லப்படுகிறது. முன்னதாக 2021இல், குறைந்தது 333 பேர் தூக்கிலிடப்பட்டனர். இந்த நிலையில், நியாயமான விசாரணை இல்லாமல் இந்த நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது என்று மனித […]

இந்த ஆண்டு ஈரானில் இதுவரை குறைந்தது 504 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர் என்று நார்வேயை தளமாகக் கொண்ட ஈரான் மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.

அவர்களில் 4 பேருக்கு இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக ஈரான் அரசாங்கம் தூக்கு தண்டனை நிறைவேற்றியுள்ளது. இது கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச எண்ணிக்கை என்று சொல்லப்படுகிறது. முன்னதாக 2021இல், குறைந்தது 333 பேர் தூக்கிலிடப்பட்டனர். இந்த நிலையில், நியாயமான விசாரணை இல்லாமல் இந்த நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது என்று மனித உரிமைகள் குழு இயக்குனர் மஹ்மூத் அமிரி-மொகத்தம் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu