வியட்நாம் தலைநகர் ஹனோயில் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் பலியாகினர்.
வியட்நாம் தலைநகர் ஹனோயில் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தீயணைப்பு படையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர். அங்கு மேலும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். இந்த ஒன்பது அடுக்குமாடி கட்டிடத்தில் 150 பேர் வசித்து வருகின்றனர். இந்த தீ விபத்தில் இருந்து மீட்கப்பட்டவர்களில் 54 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.