சிங்கப்பூரைச் சேர்ந்த மோர்கன் ஸ்டான்லி நிறுவனமும், சூசைட் ஜெனரல் நிறுவனமும், அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் பிரபல நிறுவனமான நைக்காவின் பங்குகளை வாங்கி உள்ளன. நேற்றைய தினம், நைக்காவின் பங்குகள் 10% உயர்ந்து, 207.85 ரூபாய்க்கு நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.
நேற்று, நைக்கா நிறுவனத்தின் 8213050 பங்குகளை மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் வாங்கியது. இது, நிறுவனத்தின் மொத்த பங்குகளில் 1.7% ஆகும். சராசரியாக, ஒரு பங்கு விலை 186.4 ரூபாய்க்கு வாங்கப்பட்டது. அதே வேளையில், சூசைட் ஜெனரல் நிறுவனம் நைக்காவின் 2630000 பங்குகளை வாங்கி உள்ளது. இது, நிறுவனத்தின் மொத்த பங்குகளில் 0.55% ஆகும். சுமார் 188.25 ரூபாய்க்கு ஒவ்வொரு பங்குகளையும் இந்த நிறுவனம் வாங்கியுள்ளது.