நைக்கா நிறுவனத்தின் பங்குகளை வாங்கிய மோர்கன் ஸ்டான்லி மற்றும் சூசைட் ஜெனரல் நிறுவனங்கள்

November 12, 2022

சிங்கப்பூரைச் சேர்ந்த மோர்கன் ஸ்டான்லி நிறுவனமும், சூசைட் ஜெனரல் நிறுவனமும், அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் பிரபல நிறுவனமான நைக்காவின் பங்குகளை வாங்கி உள்ளன. நேற்றைய தினம், நைக்காவின் பங்குகள் 10% உயர்ந்து, 207.85 ரூபாய்க்கு நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது. நேற்று, நைக்கா நிறுவனத்தின் 8213050 பங்குகளை மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் வாங்கியது. இது, நிறுவனத்தின் மொத்த பங்குகளில் 1.7% ஆகும். சராசரியாக, ஒரு பங்கு விலை 186.4 ரூபாய்க்கு வாங்கப்பட்டது. அதே வேளையில், சூசைட் ஜெனரல் […]

சிங்கப்பூரைச் சேர்ந்த மோர்கன் ஸ்டான்லி நிறுவனமும், சூசைட் ஜெனரல் நிறுவனமும், அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் பிரபல நிறுவனமான நைக்காவின் பங்குகளை வாங்கி உள்ளன. நேற்றைய தினம், நைக்காவின் பங்குகள் 10% உயர்ந்து, 207.85 ரூபாய்க்கு நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

நேற்று, நைக்கா நிறுவனத்தின் 8213050 பங்குகளை மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் வாங்கியது. இது, நிறுவனத்தின் மொத்த பங்குகளில் 1.7% ஆகும். சராசரியாக, ஒரு பங்கு விலை 186.4 ரூபாய்க்கு வாங்கப்பட்டது. அதே வேளையில், சூசைட் ஜெனரல் நிறுவனம் நைக்காவின் 2630000 பங்குகளை வாங்கி உள்ளது. இது, நிறுவனத்தின் மொத்த பங்குகளில் 0.55% ஆகும். சுமார் 188.25 ரூபாய்க்கு ஒவ்வொரு பங்குகளையும் இந்த நிறுவனம் வாங்கியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu