மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் உலக நாடுகளின் பொருளாதார தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் இந்தியா ‘ஓவர் வெயிட்’ என்ற முன்னேற்ற நிலையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும் நாடுகளுக்கு ஓவர் வெயிட் என்ற ரேட்டிங் வழங்கப்படுகிறது. அந்த வகையில், இந்தியாவுக்கு இந்த ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளது, இந்தியாவின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் மீது நிறுவனம் கொண்ட நம்பிக்கையை குறிக்கிறது. முதலில் அண்டர் வெயிட் ரேட்டிங்கில் இருந்த இந்தியா, ஈக்குவல் வெயிட் பிரிவுக்கு முன்னேறி, தற்போது ஓவர் வெயிட் ரேட்டிங் பிரிவுக்கு முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது. அதிகமான அந்நிய முதலீடுகள் இந்தியாவின் எதிர்கால பொருளாதார வளர்ச்சியை சிறப்பாக்கி உள்ளதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.
இந்தியாவுக்கு சாதகமான ரேட்டிங் வழங்கப்பட்டுள்ள அதே வேளையில், அமெரிக்கா மற்றும் சீனா நாடுகளுக்கு பாதகமான ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், AAA என்ற அந்தஸ்தில் உள்ள அமெரிக்கா அதிலிருந்து கீழே இறக்கப்பட்டுள்ளது. மேலும், சீனாவின் பொருளாதார வளர்ச்சி முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளதாக மோர்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது.