மொராக்கோ நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 2100- ஐ தாண்டியது

September 11, 2023

மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 2100 - ஐ தாண்டியுள்ளது. மொராக்கோ நாட்டில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. இதில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இரவு நேரம் என்பதால் மக்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ள பலரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து கட்டிட இடுபாடுகளில் இருந்து உடல்கள் எடுக்கப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது. அந்த வகையில் தற்போது […]

மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 2100 - ஐ தாண்டியுள்ளது.

மொராக்கோ நாட்டில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. இதில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இரவு நேரம் என்பதால் மக்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ள பலரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து கட்டிட இடுபாடுகளில் இருந்து உடல்கள் எடுக்கப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது. அந்த வகையில் தற்போது 2000-ஐ தாண்டியுள்ளது என மொராக்கோ உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

அதிகபட்சமாக அல்-ஹவுஸ் பிராந்தியத்தில் 1,293 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், டரவ்டான்ட் பகுதியில் 452 பேர் என்றும் கூறப்படுகிறது. மேலும் 2,059 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்ககூடும் என்று தெரிகிறது. இந்நிலையில் அங்கு 3 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்புக்குள்ளான மொராக்கோவுக்கு பல்வேறு நாடுகள் உதவி செய்கின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu