அமெரிக்காவின் பிரபல இணைய வழி கடன் வழங்கும் நிறுவனமான பெட்டர்.காம், 900 ஊழியர்களை ஜூம் காலில் வெளியேற்றியது. கடந்த 2021 டிசம்பரில் நடந்த இந்த நிகழ்வு, உலக அளவில் பேசு பொருளானது. இந்த நிறுவனம், இந்திய அமெரிக்கரான விஷால் கார்கே உடையதாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், புதிய சுற்று பணி நீக்கம் குறித்த அறிவிப்பை நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.
முன்னதாக, 2022 மே மாதத்தில் நிறுவனத்தின் ஊழியர்களை தாமாக வெளியேறுமாறு விஷால் கார்கே கேட்டுக்கொண்டார். அதன்படி, 920 பேர் வெளியேறினர். அதன் பிறகு, பல்வேறு கட்ட பணி நீக்கங்கள் நடைபெற்று, இதுவரை மொத்தம் 4000 ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போதைய பணி நீக்கத்தில் ரியல் எஸ்டேட் பிரிவு மொத்தமாக பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.