உலக பொருளாதார மாநாட்டில் 54 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. அதன் மதிப்பு ரூ.15.70 லட்சம் கோடியாகும்.
மராட்டியத்தில் ரூ.4.99 லட்சம் கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இவை பல்வேறு துறைகளில் 92,000 வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக கூறப்பட்டுள்ளது. இதில், ஜே.எஸ்.டபிள்யூ. நிறுவனம் பெரிய அளவிலான முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஸ்டீல், சிமெண்ட், உட்கட்டமைப்பு மற்றும் மின்சார வாகனங்களில் ரூ.3 லட்சம் கோடி முதலீடு செய்யப்படுகிறது. இதனால், நாக்பூர் மற்றும் கச்சிரோலி நகரங்களில் 10,000 வேலைவாய்ப்புகள் உருவாகும். முதல்-மந்திரி பட்னாவிஸ், மராட்டியத்தின் வளர்ச்சிக்காக ஜே.எஸ்.டபிள்யூ. நிறுவனத்தின் தலைவர் சஜ்ஜன் ஜிண்டாலுக்கு நன்றி தெரிவித்தார். உலக பொருளாதார மாநாட்டில் 54 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. அதன் மதிப்பு ரூ.15.70 லட்சம் கோடியாகும்.














