மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் - அன்பில் மகேஷ்

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் கல்வித்துறை மேம்பாட்டிற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது என்று அமைச்சர் மகேஷ் கூறியுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்துள்ளார். தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இந்தியாவிலேயே முதன்முறையாக கல்வி மேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ளது. TEALS (Technical Education And Learning Support) எனும் திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. […]

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் கல்வித்துறை மேம்பாட்டிற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது என்று அமைச்சர் மகேஷ் கூறியுள்ளார்.

அமெரிக்கா சென்றுள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்துள்ளார். தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இந்தியாவிலேயே முதன்முறையாக கல்வி மேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.

TEALS (Technical Education And Learning Support) எனும் திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. முதல்கட்டமாக 13 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, 3, 800 மாணவர்கள் பயன்பெறும் வகையில் TEALS திட்டம் விரைவில் தொடங்கி செயல்படுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu