இந்திய உறவில் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது - மாலத்தீவு எதிர்க்கட்சித் தலைவர் அப்துல்லா

February 27, 2024

இந்தியா உடனான உறவில் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது என்று மாலத்தீவின் எதிர்கட்சித் தலைவர் அப்துல்லா ஷாகித் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது, மாலத் தீவுடன் பண்பாடு ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் இந்தியா இணைந்துள்ளது. வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த கூட்டாளியான இந்தியாவிடம் இருந்து மாலத்தீவு விலகி இருக்க முடியாது. கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமி பாதிப்பின் போது உதவிய நட்பு நாடுகளில் இந்தியா முதன்மையாக இருந்தது. மாலத்தீவு தலைநகர் மாலியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்ட போது […]

இந்தியா உடனான உறவில் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது என்று மாலத்தீவின் எதிர்கட்சித் தலைவர் அப்துல்லா ஷாகித் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது, மாலத் தீவுடன் பண்பாடு ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் இந்தியா இணைந்துள்ளது. வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த கூட்டாளியான இந்தியாவிடம் இருந்து மாலத்தீவு விலகி இருக்க முடியாது. கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமி பாதிப்பின் போது உதவிய நட்பு நாடுகளில் இந்தியா முதன்மையாக இருந்தது. மாலத்தீவு தலைநகர் மாலியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்ட போது சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியா தண்ணீர் அனுப்பியது. கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் பாதிப்பின் போது மாலத்தீவுக்கு உதவிய முதல் நாடு இந்தியா தான். கடந்த 60 ஆண்டுகளில் பொருளாதார ரீதியாக வேகமாக வளர்ந்து வருகிறது இந்தியா. எனவே மாலத்தீவு அரசு இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தின் மூலம் பயனடையக்கூடிய அனைத்து வழிகளையும் ஆராய்வதில் கவனம் செலுத்த வேண்டும். தற்போது மாலத்தீவின் வெளியுறவு கொள்கையில் அதிபர் மூயிஸ் சில மாற்றங்கள் செய்திருக்கிறார். எனினும் இந்தியாவுடன் உறவில் குழப்பத்தை ஏற்படுத்துவது கூடாது. அது சாத்தியமில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu