அண்மையில், பேடிஎம் நிறுவனம் வங்கி செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கான உரிமத்தை மத்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்தது. அதைத்தொடர்ந்து, பேடிஎம் நிறுவனம் தனது வேலட் வர்த்தகத்தை முகேஷ் அம்பானி இடம் விற்க உள்ளதாக செய்தி வெளியானது. எனவே, ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் பங்குகள் 14% அளவில் உயர்ந்துள்ளன.
பேடிஎம் வேலட் வர்த்தக திட்டத்தை ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகியவற்றிடம் விற்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதன் எதிரொலியாக, ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் உயர்ந்து வருகின்றன. அதே சமயத்தில், பேடிஎம் நிறுவனத்தின் பங்குகள் மிகப்பெரிய சரிவை பதிவு செய்து வருகின்றன.