துரித வர்த்தகத்தில் களமிறங்கும் ஜியோ மார்ட்

May 29, 2024

வரும் ஜூன் மாதத்தில் ரிலையன்ஸ் குழுமத்தை சேர்ந்த ஜியோ மார்ட் நிறுவனம் துரித வர்த்தகத்தில் களமிறங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் ஜொமாட்டோ நிறுவனத்தின் பிலிங்கிட், ஸ்விகி நிறுவனத்தின் இன்ஸ்டா மார்ட், டாடா குழுமத்தின் பிக்பாஸ்கெட், ஜெப்ட்டோ ஆகிய நிறுவனங்கள் துரித வர்த்தகத்தில் கோலோச்சுகின்றன. இந்த சூழலில் துரித வர்த்தகத்தில் ரிலையன்ஸ் குழுமம் களமிறங்குகிறது. மேலும், அடுத்த சில வாரங்களில் பிளிப்கார்ட் நிறுவனமும் துரித வர்த்தகத்தில் களமிறங்குவதாக அறிவித்துள்ளது. இந்தியாவின் முக்கிய 7 நகரங்களில் ஜியோ மார்ட் […]

வரும் ஜூன் மாதத்தில் ரிலையன்ஸ் குழுமத்தை சேர்ந்த ஜியோ மார்ட் நிறுவனம் துரித வர்த்தகத்தில் களமிறங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் ஜொமாட்டோ நிறுவனத்தின் பிலிங்கிட், ஸ்விகி நிறுவனத்தின் இன்ஸ்டா மார்ட், டாடா குழுமத்தின் பிக்பாஸ்கெட், ஜெப்ட்டோ ஆகிய நிறுவனங்கள் துரித வர்த்தகத்தில் கோலோச்சுகின்றன. இந்த சூழலில் துரித வர்த்தகத்தில் ரிலையன்ஸ் குழுமம் களமிறங்குகிறது. மேலும், அடுத்த சில வாரங்களில் பிளிப்கார்ட் நிறுவனமும் துரித வர்த்தகத்தில் களமிறங்குவதாக அறிவித்துள்ளது. இந்தியாவின் முக்கிய 7 நகரங்களில் ஜியோ மார்ட் நிறுவனம் துரித வர்த்தக சேவைகளை தொடங்கும் என கூறப்படுகிறது. தொடர்ந்து, 1000 நகரங்களில் ஜியோ மார்ட் சேவை விரிவாக்கம் செய்யப்படும் என தகவல் வெளிவந்துள்ளது. முன்னதாக, 90 நிமிடங்களுக்குள் மளிகைப் பொருட்களை விநியோகிக்கும் ஜியோ மார்ட் எக்ஸ்பிரஸ் சேவையை ரிலையன்ஸ் நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu