வங்கதேசத்தில், நேற்று முன்தினம், சரக்கு ரயில் உடன் பயணிகள் ரயில் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், 17 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.வங்கதேசத்தில் உள்ள கிஷோர்கஞ்ச் என்ற பகுதிக்கு அருகில் ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது. எகாரோசிந்தூர் கோதுலி எக்ஸ்பிரஸ் ரயில், சட்டோகிராம் நகரை நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. இந்த விபத்தில், நூற்றுக்கணக்கான பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர். ரயில் பெட்டிகளுக்கு இடையில் சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. ரயில் விபத்து நேர்ந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன், குறிப்பிட்ட ரயில் வழித்தடத்தில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. வங்கதேச ரயில் விபத்து தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன.














