கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு நிதி உதவி செய்தவர் ஹபீஸ் சையது. அவர், லஸ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவராக அறியப்படுகிறார். மேலும், இவரை சர்வதேச தீவிரவாதி என ஐ நா மற்றும் அமெரிக்கா அறிவித்துள்ளன. இந்த நிலையில், அவருக்கு பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருந்தது. தற்போது, அவர் பாகிஸ்தான் சிறையில் உள்ளதாக ஐநா சபையின் பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது.
மும்பை தாக்குதல் குற்றவாளியான ஹபீஸ் சையது, இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், இவரை இந்தியாவுக்கு நாடு கடத்த பாகிஸ்தானிடம் இந்திய அரசு தொடர்ந்து கேட்டுக் கொண்டது. ஆனால், இவர் பாகிஸ்தான் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். தற்போது, அவருக்கு 78 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்சமயத்தில் அவர் சிறைவாசம் அனுபவித்து வருவதாகவும், ஐநா சபையின் பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது. கடந்த 2020 பிப்ரவரி 12 முதல் அவர் சிறையில் உள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.