மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் சொத்துக்கள் ஏலம்

January 3, 2024

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் சொத்துக்கள் நாளை மும்பையில் ஏலம் விடப்பட உள்ளது. நிழல் உலக தாதா என அழைக்கப்படும் முஹம்மது இப்ராஹிம் மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளி ஆவார். இவர் இந்தியாவில் இருந்து தப்பித்து பாகிஸ்தானில் பதுங்கி வாழ்ந்து வருகிறார். வெளிநாடு தப்பிய தாவுத் இப்ராஹிம் மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்துக்களை மத்திய அரசு கடத்தல் மற்றும் அந்நிய செலவாணி முறைகேடு தடுப்புச் சட்டத்தில் பறிமுதல் செய்துள்ளது. தற்போது நாளை […]

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் சொத்துக்கள் நாளை மும்பையில் ஏலம் விடப்பட உள்ளது.

நிழல் உலக தாதா என அழைக்கப்படும் முஹம்மது இப்ராஹிம் மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளி ஆவார். இவர் இந்தியாவில் இருந்து தப்பித்து பாகிஸ்தானில் பதுங்கி வாழ்ந்து வருகிறார். வெளிநாடு தப்பிய தாவுத் இப்ராஹிம் மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்துக்களை மத்திய அரசு கடத்தல் மற்றும் அந்நிய செலவாணி முறைகேடு தடுப்புச் சட்டத்தில் பறிமுதல் செய்துள்ளது. தற்போது நாளை இப்ராஹிம்மின் தாய் அமீனா பீ பெயரில் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள நான்கு விவசாய நிலங்களை மத்திய அரசு ஏலம் விட உள்ளது. இந்த ஏலம் விடும் பணி நாளை மும்பையில் நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக 2017 ஆம் ஆண்டு மும்பை பெண்டி பஜாரில் இருந்த தாவூத் இப்ராஹிமுக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட சொத்துக்கள் 11 கோடிக்கு ஏலம் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu