ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் விதர்பா அணியை வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றது.
மும்பை வான்கடே மைதானத்தில் ரஞ்சிக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டங்கள் நடைபெற்றது. அதில் மும்பை, விதர்பா அணிகள் போட்டியிட்டன.இதில் டாஸ் வென்ற விதர்பா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 224 ரன்களில் ஆல் அவுட் ஆனது. பின்னர் தொடர்ந்து ஆடிய விதர்பா அணி முதல் இன்னிங்ஸில் 115 ரங்களில் ஆல் அவுட் ஆனது. முதல் இன்னிங்ஸில் 119 ரன்கள் முன்னிலை பெற்ற மும்பை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 418 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனை அடுத்து 538 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய விதர்பா அணி இறுதி ஆட்டத்தில் 368 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 169 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி 42வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.














