மும்பையின் மொழி மராத்தி - முதல்வர் அறிவிப்பு

மும்பையின் மொழி மராத்திதான், அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என மும்பை முதல்வர் தெரிவித்துள்ளார். மும்பையில் மராத்தி மொழி தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று மூத்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி தெரிவித்ததற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், "மும்பையில் பல்வேறு மொழி பேசுபவர்கள் வாழ்கின்றனர். ஆதலால் மராத்தி மொழி கட்டாயமல்ல" என்றார். இதில் மகாராஷ்டிரா அமைச்சர் மங்கள் பிரபாத் லோபா கலந்து கொண்டார். சிவசேனா (உத்தவ் தாக்கரே) மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இந்த […]

மும்பையின் மொழி மராத்திதான், அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என மும்பை முதல்வர் தெரிவித்துள்ளார்.

மும்பையில் மராத்தி மொழி தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று மூத்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி தெரிவித்ததற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், "மும்பையில் பல்வேறு மொழி பேசுபவர்கள் வாழ்கின்றனர். ஆதலால் மராத்தி மொழி கட்டாயமல்ல" என்றார். இதில் மகாராஷ்டிரா அமைச்சர் மங்கள் பிரபாத் லோபா கலந்து கொண்டார்.

சிவசேனா (உத்தவ் தாக்கரே) மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், பாஜக அரசாங்கம் இதுகுறித்து நிலைப்பாடு தெளிவுபடுத்த வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் ஜாதவ் வலியுறுத்தினார். இதற்குப் பதிலளித்த முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், "மும்பையின் மொழி மராத்திதான். அனைவரும் மராத்தி கற்றுக்கொள்ள வேண்டும். எங்கள் அரசு அனைத்து மொழிகளையும் மதிக்கிறது. உங்கள் சொந்த மொழியை நேசிப்பவராக இருந்தால், மற்ற மொழிகளையும் மதிக்க வேண்டும். இந்த கருத்தில் சுரேஷ் பையாஜி எனக்கு உடன்படுவார் என நம்புகிறேன்" என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu