இசைக்கருவிகள் ஏற்றுமதி 3.5 மடங்கு உயர்வு

October 28, 2022

நடப்பு நிதி ஆண்டில், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் இசைக்கருவிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து வர்த்தகம் மற்றும் தொழில் துறை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். “நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில், இசைக்கருவிகள் ஏற்றுமதி 3.5% உயர்ந்துள்ளது. ஏற்றுமதி மதிப்பு 172 கோடி ரூபாயாக உள்ளது. முன்னதாக, கடந்த 2014 ஆம் நிதி ஆண்டில், 49 கோடி ரூபாய்க்கு இசைக்கருவிகள் ஏற்றுமதி செய்யப்பட்டது உச்சபட்சமாக இருந்தது. […]

நடப்பு நிதி ஆண்டில், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் இசைக்கருவிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து வர்த்தகம் மற்றும் தொழில் துறை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். “நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில், இசைக்கருவிகள் ஏற்றுமதி 3.5% உயர்ந்துள்ளது. ஏற்றுமதி மதிப்பு 172 கோடி ரூபாயாக உள்ளது. முன்னதாக, கடந்த 2014 ஆம் நிதி ஆண்டில், 49 கோடி ரூபாய்க்கு இசைக்கருவிகள் ஏற்றுமதி செய்யப்பட்டது உச்சபட்சமாக இருந்தது. அந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது” என்று அவரது ட்விட்டர் பதிவு கூறுகிறது.

இந்நிலையில், இசைக்கருவிகளின் ஏற்றுமதி குறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவர், “இந்திய இசையின் புகழ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதனால், இந்திய இசைக்கருவிகளின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இசைக்கருவிகளின் ஏற்றுமதி வளர்ச்சி உற்சாகம் அளிப்பதாக உள்ளது. இந்த துறைக்கு ஒளிமயமான எதிர்காலம் ஏற்பட்டுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu