எலான் மஸ்க் சீன பயணம் - டெஸ்லா குறித்து ஆலோசனை

April 29, 2024

டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க் நேற்று திடீர் பயணமாக சீனாவுக்கு சென்றுள்ளார். எலான் மஸ்க் நேற்று சீனாவுக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் அந்நாட்டு பிரதமர் லீ கெக்கியாங்கை சந்தித்து பேசியுள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு டெஸ்லா நிறுவனம் சீனாவில் சுமார் 700 கோடி டாலர் செலவில் கார் உற்பத்தி தொழிற்சாலை அமைத்தது. இதையடுத்து அந்நாட்டு சந்தையில் டெஸ்லா கார்கள் பிரபலமாகின. என்றபோதிலும். கடந்த சில ஆண்டுகளில் உள்ளூர் தயாரிப்பாளர்கள் டெஸ்லாவுக்கு போட்டியாக வளர்ந்துள்ளனர். […]

டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க் நேற்று திடீர் பயணமாக சீனாவுக்கு சென்றுள்ளார்.

எலான் மஸ்க் நேற்று சீனாவுக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் அந்நாட்டு பிரதமர் லீ கெக்கியாங்கை சந்தித்து பேசியுள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு டெஸ்லா நிறுவனம் சீனாவில் சுமார் 700 கோடி டாலர் செலவில் கார் உற்பத்தி தொழிற்சாலை அமைத்தது. இதையடுத்து அந்நாட்டு சந்தையில் டெஸ்லா கார்கள் பிரபலமாகின. என்றபோதிலும். கடந்த சில ஆண்டுகளில் உள்ளூர் தயாரிப்பாளர்கள் டெஸ்லாவுக்கு போட்டியாக வளர்ந்துள்ளனர். உள்ளூர் மின்சார வாகன நிறுவனங்களின் விற்பனை அதிகரித்து டெஸ்லா கார்களின் விற்பனை குறைய தொடங்கியுள்ளது. இதனால் டெஸ்லாக் கார்களின் விலை 6% குறைந்தது. இந்த சூழ்நிலையில் தான் மஸ்க் சீனா வந்துள்ளார்.

சீனாவில் கடந்த வியாழக்கிழமை பெய்ஜிங் ஆட்டோ ஷோ என்ற நிகழ்ச்சி தொடங்கியது. சர்வதேச வர்த்தகத்தை மேம்படுத்த சீன அரசு அழைப்பு விடுத்ததன் பேரில் அவர் அங்கு வந்து இருப்பதாக அந்நாட்டு தரப்பில் கூறப்பட்டுள்ளது. சீனாவில் விற்கப்படும் டெஸ்லா நிறுவன மின்சார கார்களில் தானியங்கி ஓட்டுனர் தொழில்நுட்பத்தை அவர் வெளியிடக்கூடும் என்று கூறப்படுகிறது. மேலும் அவர் பல்வேறு மூத்த அரசு அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என்று கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu