எலான் மஸ்க் அவருடைய இந்திய பயணத்தை ஒத்தி வைத்துள்ளார்.
ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மாஸ்க் நாளை இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு வர உள்ளதாக முன்பு தெரிவிக்கப்பட்டது. அவர் இந்த பயணத்தின் போது பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில், மஸ்கின் பயணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது, டெஸ்லா நிறுவன கூட்டம் வரும் 23ஆம் தேதி நடைபெற இருக்கிறது. டெஸ்லா கடமைகள் நிறைய இருக்கிறது. இதில் நான் கலந்து கொள்ள வேண்டியிருப்பதால் என்னுடைய இந்திய பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நான் இந்தியாவுக்கு வர முடிவு செய்துள்ளேன் என்று கூறியுள்ளார்.