சென்னை அணி முஸ்தபிசுர் ரஹ்மானை ரூபாய் 2 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.
துபாயில் 17 வது ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் நேற்று நடைபெற்றது. இதில் மொத்தம் 333 வீரர்கள். இவர்களில் 214 பேர் இந்தியர்கள், 119 பேர் வெளிநாட்டினர்கள். இதில் வங்காளதேச அணியின் முஸ்தபிசுர் ரஹ்மானை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. மேலும் சமீர் ரிஷ்வியை 8.40 கோடிக்கும், ஷர்துல் தாகூறை 4 கோடிக்கும், ரச்சின் ரவீந்திராவையும் 1.80 கோடி ரூபாய்க்கும் சென்னை அணி ஏலம் எடுத்துள்ளது. இதேபோன்று குஜராத் டைட்டன்ஸ் அணி ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடி கிரிக்கெட் வீரர் ராபின் மின்சை ரூபாய் 3.6 கோடி ரூபாய்க்கும், தென் ஆப்பிரிக்காவின் ரைலி ரூசோவை 8 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணி எடுத்துள்ளது. மேலும் குமார் குசக்ராவை டெல்லி கேப்பிடல் அணி 7.20 கோடி ரூபாய்க்கும், ஏலம் தமிழக வீரர் ஷாருக்கான் 7.40 கோடி ரூபாய்கும் குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.