மியான்மரில் 6 மாதங்களில் புதிய தேர்தல் – ராணுவ அவசர நிலை முடிவுக்கு வருமென அறிவிப்பு

August 1, 2025

2021ல் ஆட்சியை கைப்பற்றிய மியான்மர் ராணுவம், 4 ஆண்டுகள் நீடித்த அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வந்து, அடுத்த 6 மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. 2020 தேர்தலில் ஆங் சான் சூகியின் கட்சி வெற்றி பெற்றதை மோசடியாகக் கூறி ராணுவம் ஆட்சியை கவிழ்த்து, சூகியை கைது செய்தது. இதையடுத்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன, ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர், பலர் சிறையில் அடைக்கப்பட்டனர். உலக நாடுகளின் அழுத்தத்திற்கிடையில், ராணுவத் தலைவர் மின் ஆங் ஹிலியாங், […]

2021ல் ஆட்சியை கைப்பற்றிய மியான்மர் ராணுவம், 4 ஆண்டுகள் நீடித்த அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வந்து, அடுத்த 6 மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

2020 தேர்தலில் ஆங் சான் சூகியின் கட்சி வெற்றி பெற்றதை மோசடியாகக் கூறி ராணுவம் ஆட்சியை கவிழ்த்து, சூகியை கைது செய்தது. இதையடுத்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன, ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர், பலர் சிறையில் அடைக்கப்பட்டனர். உலக நாடுகளின் அழுத்தத்திற்கிடையில், ராணுவத் தலைவர் மின் ஆங் ஹிலியாங், அடுத்த 6 மாதங்களில் சுதந்திரமான, நியாயமான தேர்தல் நடத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கத்திடம் அதிகாரங்களை ஒப்படைப்போம் என தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu