மைசூரு தசரா திருவிழா வரும் 26-ம் தேதி தொடக்கம்

September 19, 2022

கர்நாடக மாநில மைசூரில் தசரா திருவிழா வரும் 26-ம் தேதி தொடங்கவுள்ளது. கர்நாடக மாநிலம் மைசூருவில் தசரா திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், 413-வது ஆண்டின் மைசூரு தசரா திருவிழா வரும் 26-ம் தேதி தொடங்குகிறது. இவ்விழாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மைசூரு சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து தொடங்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து அரண்மனை வளாகத்தில் உள்ள பன்னி மரத்துக்கு இளவரசர் யதுவீர் சிறப்பு வழிபாடு செய்வார். […]

கர்நாடக மாநில மைசூரில் தசரா திருவிழா வரும் 26-ம் தேதி தொடங்கவுள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூருவில் தசரா திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், 413-வது ஆண்டின் மைசூரு தசரா திருவிழா வரும் 26-ம் தேதி தொடங்குகிறது. இவ்விழாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மைசூரு சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து தொடங்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து அரண்மனை வளாகத்தில் உள்ள பன்னி மரத்துக்கு இளவரசர் யதுவீர் சிறப்பு வழிபாடு செய்வார்.

திருவிழாவின் 10 நாட்களும் மலர் கண்காட்சி, திரைப்பட திருவிழா, உணவு திருவிழா, இளைஞர் திருவிழா, மகளிர் திருவிழா என பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழாவின் இறுதி நாள் மாலையில் சாமுண்டீஸ்வரி அம்மனின் 750 கிலோ எடையிலான தங்க அம்பாரியை அபிமன்யு யானை சுமந்து ஊர்வலமாக‌ செல்லும். இதைத் தொடர்ந்து குதிரைப் படை, யானைப் படை, இசைக் குழுவினர், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கலைநிகழ்ச்சி குழுவினர் ஊர்வலம் என நிகழ்ச்சிகள் நடைபெறும்.

நிறைவு நாளில் ஜம்பு சவாரி ஊர்வலத்தை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர‌ மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu