காஷ்மீரில் 17 பேர் மர்மமான முறையில் மரணம் அடைந்ததால் பதால் கிராமத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரின் ரஜோரியில் உள்ள பதால் கிராமம் கடந்த சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, ஏனெனில் அங்கு உள்ள 3 குடும்பங்களில் மர்மமான முறையில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த டிசம்பர் 7 முதல் 19 வரை இந்த மரணங்கள் தொடர் சம்பவமாக நிகழ்ந்துள்ளன, ஆனால் இதுவரை அவர்களின் மரணத்தின் காரணம் கண்டறியப்படவில்லை. உடல்களில் எடுக்கப்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன, மேலும் விசாரணைக்கான சிறப்புப்படை அமைக்கப்பட்டுள்ளது.
பதால் கிராமத்தை மாவட்ட நிர்வாகம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து, 3 மண்டலங்களாக பிரித்து, மக்கள் கூடுவதைத் தடைசெய்து தொற்று பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் வசிக்கும் அனைவருக்கும், குறிப்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு, அதிகாரிகள் வழங்கும் உணவையே உண்ண வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .