புளோரிடா கடற்கரையில் இருந்த மர்ம பொருள், உடைந்த கப்பலின் பாகம் என கண்டறியப்பட்டுள்ளது

December 10, 2022

அண்மையில், புளோரிடா கடற்கரையில், 80 அடி நீளமுள்ள மரம் மற்றும் உலோகத்தால் ஆன பொருள் தென்பட்டது. பூமியிலிருந்து வெளிவந்த அந்த பொருள் குறித்த ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். இந்நிலையில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று, 60 அடி நீளமுள்ள கட்டுமரம் ஒன்றை அந்தப் பகுதியில் கண்டெடுத்துள்ளது. அதில், வளைவான, மரத்தால் கட்டமைக்கப்பட்ட மற்றும் இணைக்கப்பட்ட பாகங்கள் உள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். எனவே, கடற்கரையில் இருந்த மர்மமான பொருள், உடைந்த கப்பலின் பாகமாகவே இருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் […]

அண்மையில், புளோரிடா கடற்கரையில், 80 அடி நீளமுள்ள மரம் மற்றும் உலோகத்தால் ஆன பொருள் தென்பட்டது. பூமியிலிருந்து வெளிவந்த அந்த பொருள் குறித்த ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். இந்நிலையில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று, 60 அடி நீளமுள்ள கட்டுமரம் ஒன்றை அந்தப் பகுதியில் கண்டெடுத்துள்ளது. அதில், வளைவான, மரத்தால் கட்டமைக்கப்பட்ட மற்றும் இணைக்கப்பட்ட பாகங்கள் உள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். எனவே, கடற்கரையில் இருந்த மர்மமான பொருள், உடைந்த கப்பலின் பாகமாகவே இருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், உடைந்த இந்த கப்பல் பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாக இருக்கலாம் என்ற கருதப்படுவதாகவும், இதன் மூலம் புளோரிடா பகுதியில் நடைபெற்ற முற்கால கடல்சார் போக்குவரத்து குறித்து அறிய முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu